Published : 11 Jul 2017 10:19 AM
Last Updated : 11 Jul 2017 10:19 AM

ஆப்கான் வீரர் ஷபிகுல்லா ஷஃபக் டி20-யில் 71 பந்துகளில் 214 ரன்கள் விளாசல்

ஆப்கான் வீரர் ஷபிகுல்லா ஷஃபக் உள்நாட்டு டி20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார்.

பாரகன் நங்கர்ஹர் சாம்பியன் டிராபி என்ற உள்நாட்டு டி20 தொடரில் விக்கெட் கீப்பர் ஷபிகுல்லா ஷஃபக் 71 பந்துகளில் 21 சிக்சர்கள் 16 பவுண்டரிகளுடன் 214 ரன்கள் விளாசினார். இதனால் இவரது கடீஸ் கிரிக்கெட் அகாதமி அணி 351 ரன்கள் குவித்தது.

எதிரணியான காபூல் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி பதிலுக்கு வெறும் 107 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஷபிகுல்லா ஷஃபக் ஆப்கான் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார். 3 ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கான் அணியில் இடம்பெற்றிருந்தார் ஷபிகுல்லா, 2012, 2014, 2016 உலகக்கோப்பை டி20 போட்டிகளில் இவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 35 போட்டிகளில் ஆடியுள்ள ஷபிக்குல்லா ஷஃபக் 392 ரன்களையே எடுத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 51 ரன்களே இவரது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். ஆனால் 143.07 என்று நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x