Last Updated : 18 Jul, 2017 09:18 AM

 

Published : 18 Jul 2017 09:18 AM
Last Updated : 18 Jul 2017 09:18 AM

ஆஸி.க்கு பதிலாக ஆப்கானிஸ்தான்

சம்பள ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையால் தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள 3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா ஏ அணி விலகி இருந்தது. இந்நிலையில் அந்த அணிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் ஏ அணி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்தியா ஏ 3-வது அணியாக கலந்து கொள்கிறது. குறுகிய வடிவிலான இந்த தொடரின் முதல் ஆட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடர் முடிவடைந்ததும் தென் ஆப்ரிக்க ஏ அணிக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x