Last Updated : 15 Jul, 2017 10:29 AM

 

Published : 15 Jul 2017 10:29 AM
Last Updated : 15 Jul 2017 10:29 AM

போபண்ணா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் கபேரியலா டப்ரோவ்ஸ்கி ஜோடி தோல்வியடைந்தது.

10-ம் நிலை ஜோடியும் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றவர்களுமான ரோகன் போண்ணா ஜோடி, நடப்பு சாம்பியனான பின்லாந்தின் ஹென்றி கொன்டினென், இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 2 மணி நேரம் போராடி 7-6(4), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டது. இத்துடன் விம்பிள்டனில் இந்திய வீரர், வீராங்கனைகளின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. போபண்ணா ஆடவர் இரட்டையர் பிரிவில் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்தார்.

சானியா மிர்சாவும் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மூட்டை கட்டினார். ஜூனியர் பிரிவில் மிகா ஜெயின், தேசாய், மிகிகா யாதவ், சித்தாந்த் பாந்தியா ஆகியோரும் தோல்வியடைந்து வெளியேறி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x