Last Updated : 22 Feb, 2017 10:37 AM

 

Published : 22 Feb 2017 10:37 AM
Last Updated : 22 Feb 2017 10:37 AM

வங்கதேச அணியில் மீண்டும் முஸ்டாபிஜூர் ரஹ்மான்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி யில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இடம் பிடித்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. முதல் டெஸ்ட் மார்ச் 7 முதல் 11 வரை காலே நகரிலும் 2-வது டெஸ்ட் கொழும்பில் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதுவரை வங்கதேச அணி 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது.

இலங்கைக்கு எதிராக மோத உள்ள கடைசி டெஸ்ட் போட்டி அந்த அணிக்கு 100-வது ஆட்டம் ஆகும். இந்த தொடர் வங்கதேச அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் சமீபத்தில் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின் போது காயம் அடைந்த 21 வயதான வேகப் பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் முழு உடல் தகுதியை பெற்றதை தொடர்ந்து அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இந்தியா வுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹாசைனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x