Published : 28 Feb 2014 10:50 AM
Last Updated : 28 Feb 2014 10:50 AM

அக்மல் சதம்; பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது பாகிஸ்தான்.

வங்கதேசத்தின் பதுல்லா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தது. பாகிஸ்தானின் ஷர்ஜீல் கான்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்தது. ஷர்ஜீல் கான் 25 ரன்களில் (37 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் சரிவு ஆரம்பானது.

பின்னர் வந்த முகமது ஹபீஸ் 10 ரன்களில் வெளியேற, 74 பந்துகளைச் சந்தித்த ஷெஸாத் 50 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில் ரன் அவுட்டாக, சோயிப் மஸூத் 13, அப்ரிதி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் 29.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

உமர் அக்மல் சதம்

எனினும் உமர் அக்மல் சிறப்பாக ஆடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டார். அவரும், அன்வர் அலியும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். அன்வர் அலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் உமர் குல் 15 ரன்களில் வெளியேற, கடைசி ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து சதம் கண்டார் உமர் அக்மல். 60 பந்துகளில் அரைசதம் கண்ட அவர், அடுத்த 28 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதனால் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது.

28 ரன்களில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய அக்மல் 89 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் 72 பந்துகளில் 74 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கன் தடுமாற்றம்

249 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஷாஸத் 9, நூர் அலி ஸத்ரன் 44 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு இணைந்த அஸ்கார் ஸ்டானிக்ஸாய்-நவ்ரோஸ் மங்கல் ஜோடி ஆமை வேகத்தில் ஆடியது.

இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடி 18.1 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தது. ஸ்டானிக்ஸாய் 40 (91 பந்துகள்), நவ்ரோஸ் 35 (57 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நஜிபுல்லா 1, நபி 15, அஷ்ரப் 4 தவ்லத் ஜத்ரன் 0, சபூர் ஜத்ரன்1 என அடுத்தடுத்து வெளியேற 47.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x