Last Updated : 13 Aug, 2016 10:02 AM

 

Published : 13 Aug 2016 10:02 AM
Last Updated : 13 Aug 2016 10:02 AM

அமெரிக்காவிடம் இந்தியா தோல்வி

மகளிருக்கான ஹாக்கி போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் இந்திய அணி 0-3 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு களமிறங்கும் இந்திய மகளிர் அணி, நேற்று முன்தினம் இரவு நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை சந்தித்தது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே அமெரிக்க அணியின் கை ஓங்கியிருந்தது. அந்த அணியின் முன்னணி வீராங்கனையான காத்லீன் பாம் 14-வது நிமிடத்தில் முதல் கோலையும், 42-வது நிமிடத்தில் 2-வது கோலையும் அடித்தார்.

52-வது நிமிடத்தில் அந்த அணியின் மெலிசா கொன்சாலஸ் ஒரு கோலை அடித்தார். இதனால் அமெரிக்க அணி 3-0 என்ற முன்னிலையை பெற்றது. இந்திய வீராங்கனைகளால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய அணி 3-0 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியைத் தொடர்ந்து 6 அணிகளைக் கொண்ட பி பிரிவில் இந்திய அணி 1 புள்ளியை மட்டுமே எடுத்து கடைசி 2 இடங்களில் உள்ளது. அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் முதல் 4 இடங்களுக்குள் வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x