Published : 02 Jun 2016 11:01 AM
Last Updated : 02 Jun 2016 11:01 AM

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு ஜோகோவிச், செரீனா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-4, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பட்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.

காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் ஜோகோவிச் சர்வதேச போட்டிகளில் 100 மில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மகளிர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போப்பண்ணா, ருமேனியாவின் புளோயின் மெர்ஜியா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் இவான் டுடிக், பிரேசிலின் மார் செலோ மெலோ ஜோடியிடம் தோல்வி யடைந்தது.

இதேபோல் இந்தியாவின் லியாண்டர் பயஸ், போலந்தின் மட்கோவிஸ்கி ஜோடி 6-7, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் ஜோடியிடம் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x