Published : 08 Aug 2016 10:54 AM
Last Updated : 08 Aug 2016 10:54 AM

ரியோ துளிகள்: வியட்நாம், தாய்லாந்துக்கு முதல் தங்கம்

வியட்நாம், தாய்லாந்து முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 41 வயதான வியட்நாமின் ஹோயாங் ஜுவான் தங்கம் வென்றார்.

மகளிருக்கான பளு தூக்குதலில் தாய்லாந்தின் சோபிடா தனசான் 48 கிலோ எடை பிரிவில் மொத்தம் 200 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

சைக்கிள் பந்தயத்தில் பெல்ஜியத்தின் கிரேக் வான் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். அவர் பந்தய தூரத்தை 6:10:05 விநாடிகளில் கடந்தார்.

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தவித்த ரஷ்யா பதக்க வேட்டையை தொடங்கியது. ஆடவருக்கான ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் அந்த நாட்டின் பெஸ்லன் முட்ரனோவ் தங்கப் பதக்கம் வென்றார்.

அகதிகள் அணியை சேர்ந்த சிரியாவின் யசுரா மர்தினி மகளிருக்கான 100 மீட்டர் பட்டர்பிளை ஹீட் பிரிவில் வெற்றி பெற்றார். எனினும் அவர் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான தகுதியை எட்ட முடியாமல் போனது.

ஆடவருக்கான ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்றில் பிரான்ஸ் வீரர் சமிர் டைவிங் செய்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடது கால் உடைந்தது. உடனடியாக மருத்துவக்குழு விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்தாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்படுவேன் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x