Published : 12 Jun 2017 09:08 AM
Last Updated : 12 Jun 2017 09:08 AM

பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொட ரில் அரை இறுதிக்கு முன்னேறு வதற்கான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று கார்டிப் நகரில் பிற்பகல் 3 மணிக்கு மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த நிலையில் 2-வது ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான தென் ஆப்ரிக்காவை வென்றது.

இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 96 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியிடம் தோல்வியடைந்திருந்தது. ஆனால் தனது அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது அமிர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்கள் வீழ்த்தவில்லை என்றாலும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆட்டத்தில் ரன்களை சீராக வாரி வழங்கினார்.

ஆனால் சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிம், மித வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி ஆகியோர் நேர்த்தியாக செயல்பட்டு தென் ஆப்ரிக்க அணியை 219 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 322 ரன்கள் இலக்கை எந்தவித பதற்றம் இல்லாமல் விளையாடி விரைவாக எட்டியது.

மெண்டிஸ் 89, தனுஷ்கா குணதிலகா 76, மேத்யூஸ் 52 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x