Last Updated : 22 May, 2017 09:44 AM

 

Published : 22 May 2017 09:44 AM
Last Updated : 22 May 2017 09:44 AM

‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தை விமானப்படை அதிகாரிகளுக்கு பிரத்யேகமாக திரையிட்ட சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கி உள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் இந்த படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் சச்சின் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தனது வரலாற்று படத்தின் கதையை பிரதமருக்கு சுருக்கமாக விளக்கவும் செய்தார் சச்சின் டெண்டுல்கர்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியும், “சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கைப் பயணமும் சாதனை களும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்வதோடு 125 கோடி மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும்” என பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தின் காட்சியை சச்சின் விமானப்படை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தார். இந்திய விமானப்படையில் சச்சின் கவுரவ கேப்டன் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் ஆடிட் டோரியத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா மற்றும் விமானப்படை, ராணுவம், கடற் படையை சேர்ந்த முக்கிய அதிகாரி கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார். படம் நிறைவடைந் ததும் முப்படையை சேர்ந்த அதி காரிகளும் அவரது குடும்பத்தினரும் எழுந்து நின்று கரகோஷத்துடன் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, சச்சினுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். சச்சின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்து பி.எஸ்.தனோவா கூறும்போது, “இது ஒரு அற்புதமான படம். சச்சின் விமானப் படையில் இணைந்த பிறகு அவரது முழு வாழ்க்கையையும் நான் பார்த்துள்ளேன். இது ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த திரைப்படம் வெளியிடப்படும் நாளான மே 26 மிகவும் முக்கியமான நாள். 1999-ல் நடைபெற்ற கார்கில் போரின் போது இந்த நாளில்தான் வான்வழித் தாக்குதலை தொடங்கினோம்” என்றார்.

கார்கில் போர் ஆனது ஜூன் மாதம் 2-வது வாரம் வரை நடைபெற்றது. இந்த காலக்கட்டத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.

ஜூன் 8-ம் தேதி நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தையும், கார்கில் போர் நினைவுகளையும் நிகழ்ச்சியின் போது பி.எஸ்.தனோவா நினைவு கூர்ந்தார்.

விழாவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சச்சின் பேசும் போது, "இந்திய விமானப்படையின் கவுரவ கேப்டன் பதவியை ஏற்ற அதே மேடையில் மீண்டும் உங்க ளுடன் உரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் பல்வேறு உறுதிகளை அளித்தார். அதன் பின்னரே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனது வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடிவு செய்த உடனே, இந்த படத் தின் முதல் காட்சியை விமானப் படை வீரர்களுக்கு காண்பிக்க வேண்டுமென மனதில் தோன்றியது.

நாட்டை பாதுகாக்கும் உங்கள் பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பதற் காகவே இந்த நாட்டிலுள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சார்பாக நான் உங்கள் முன் நிற்கி றேன். நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்றார்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x