Published : 05 Apr 2017 04:43 PM
Last Updated : 05 Apr 2017 04:43 PM

ஐபிஎல் சிறப்பு எமோஜிக்கள் ட்விட்டரில் வெளியீடு

ஐபிஎல் விளையாட்டில் முதல்முறையாக ட்விட்டர் நிறுவனம் கிரிக்கெட் நட்சத்திரங்களின் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி நெட்டிசன்கள் ட்விட்டரில், ஹேஷ்டேகைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரைப் பதிவிட்டால் அவர்களின் புகைப்படம் தாங்கிய எமோஜிக்கள் தோன்றுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல #IPL என்று பதிவிட்டாலும் ஐபிஎல் எமோஜி தானாகவே தோன்றும்.

இதுகுறித்து பிசிசிஐ தலைமை செயல் அலுவலர் ராகுல் ஜோஹ்ரி கூறும்போது, ''நம்முடைய சூப்பர் ஸ்டார்களைக் கொண்டாடும் விதமாக இந்த ட்விட்டர் எமோஜிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை கிரிக்கெட் நாயகர்களுக்கே அர்ப்பணிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

மாதிரிப்படம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் போட்டிகள் இன்று (புதன்கிழமை) கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஹைதராபாத்தில் தொடங்குகின்றன. தொடக்க விழாவில் நடிகை எமி ஜாக்சன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

வழக்கமாக ஐபிஎல் தொடரின் தொடக்க விழா, போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் ஒரு இடத்தில் மட்டுமே நடத்தப்படும்.

இம்முறை போட்டியை நடத்தும் 8 இடங்களில் தொடக்க விழா நடத்தப்பட உள்ளது. அணி உரிமையாளர்கள் தனித்தனியாக தங்களது அணியின் சொந்த நகரத்தில் தொடக்க விழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x