Published : 06 Jul 2016 09:33 AM
Last Updated : 06 Jul 2016 09:33 AM

ஒலிம்பிக் ஒரு மாத கவுன்ட் டவுன் தொடங்கியது

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவானது 17 நாட்கள் நடைபெறுகிறது. மொத்தம் 206 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

மொத்தம் 42 வகையான விளையாட்டுகளில் 306 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் சாவோ பாலோ, பெலோ ஹாரிசான்டி, சல்வேடார், பிரேசிலா, மனாஸ் ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடத்தப்படுகிறன்றன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒலிம்பிக் போட்டி நடத்தப் படுவது இதுவே முதன் முறை யாகும். மேலும் அதிக அளவிலான நாடுகளும், அதிக அளவிலான வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கும் போட்டியாக ரியோ ஒலிம்பிக் அமைய உள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் கோசாவோ, தெற்கு சுடான் ஆகிய நாடுகள் முதன் முறையாக களமிறங்குகிறது. மேலும் இந்த முறை ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 308 தங்கப் பதக்க வேட்டைக்கான ஒரு மாத ‘கவுன்ட்டவுன்’ நேற்று தொடங்கியது. அதிகரிக்கும் குற்றச் செயல்கள், நிதி பற்றாக்குறை, அரசியல் நெருக்கடி, சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்களின் போராட்டங்கள், ஜிகா வைரஸ் தாக்குல் அபாயம் ஆகியவற்றுக்கிடையே இந்த ‘2016 ரியோ ஒலிம்பிக் கவுன்ட் டவுன்’ தொடங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் திருவிழா தொடங்க இன்னும் சரியாக 30 நாட்கள் உள்ளன. போட்டிகளை காண 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற ரியோ நகரம் கடந்த 8 ஆண்டுகளாக போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து முடித்துள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் போலீஸார் ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது 2012 ஒலிம்பிக் போட்டியில் பணியாற்றிய போலீஸாரின் எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமாகும்.

ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியாவில் இருந்து 13 வகை யான விளையாட்டுப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் கலந்து கொள்ள உள்ள னர். இதுவரை 104 பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி சுற்று போட்டிகள் இன்னும் முடிவடை யாததால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வது இதுவே முதன்முறை. அதிகபட்சமாக கடந்த 2012 ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 83 பேர் கலந்து கொண்டனர்.

இந்தியா முதன்முறையாக 1900-ம் ஆண்டில் ஒலிம்பிக்கில் பங்கேற்றது. இந்தியாவின் சார்பில் நார்மன் பிச்சர்ட் என்ற ஒரு வீரர் மட்டுமே கலந்து கொண்டார். தடகள வீரரான அவர் இரு வெள்ளிப் பதக்கங்கள் கைப்பற்றினார்.

அதன் பினர் 1928-ல் இருந்து அனைத்து ஒலிம்பிக் போட்டிகளி லும் இந்தியா பங்கேற்று வரு கிறது. இதுவரை மொத்தம் 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் 9 தங்கப் பதக்கங்களும், 6 வெள்ளிப் பதக்கமும் 11 வெண் கலப் பதக்கங்களும் அடங்கும்.

கடைசியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 2 வெள்ளியும், 4 வெண்கலப் பதக்கமும் இந்தியா கைப்பற்றியிருந்தது. பதக்கப் பட்டியலில் 1900-ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா 17-வது இடம் பிடித்திருந்ததே அதிகபட்ச சாதனையாக உள்ளது. அதிலும் இந்த தொடரில் 24 நாடுகள் பங்கேற்றிருந்தன.

இம்முறை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர் களின் திறமை என்ன?, அவர்களின் சாதனை, பதக்க வாய்ப்பு ஆகியவற் றுடன் ஒலிம்பிக் வரலாறு, படைக்கப் பட்ட சாதனைகள் இன்னும் பல அரிய தகவல்களுடன் வரும் நாட்களில் காண்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x