Published : 16 Apr 2017 11:03 AM
Last Updated : 16 Apr 2017 11:03 AM

வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? - பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத் தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையி லான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியுடன் மோதுகிறது.

சமீபத்தில் முடிவடைந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு விராட் கோலியும், ஸ்மித்தும் தற்போது தொழில்முறை போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளுமே 4 ஆட்டத்தில் விளையாடி தலா 3 தோல்விகளை பெற்றுள்ளன.

காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத கோலி, மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய நிலையில் 47 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். அவரது வருகையால் அணிக்கு புதுத்தெம்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆட்டத்தில் குறைந்த ரன்கள் இலக்கை கொடுத்த போதிலும் சுழற்பந்து வீச்சாளரான சாமுவேல் பத்ரி தொடக்கத்திலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியதால் வெற்றி கைநழுவியது. இன்றைய ஆட்டத்திலும் பத்ரி நெருக்கடி கொடுக்கக்கூடும்.

பேட்டிங்கில் கெய்லின் மோச மான பார்மும் அணிக்கு பெரிய பின் னடைவாக உள்ளது. ஒரு ஆட்டத் தில் நீக்கப்பட்ட அவர் மற்ற 3 ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்த டி வில்லியர்ஸ், தான் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் 46 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். ஆனால் மும்பை அணிக்கு எதிராக 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி கட்டத்தில் பெரிய அளவில் அதிரடியாக விளையாடி அணியை காப்பாற்ற அவர் தவறினார்.

இன்றைய ஆட்டத்தில் கெய்ல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாட்சன் இடம் பெற வாய்ப்புள் ளது. கெய்ல் கடந்த 11 இன்னிங்ஸ் களில் ஒரு அரை சதம் மட்டுமே அடித் துள்ளார். மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட் செய்யும் கேதார் ஜாதவ் விரைவிலேயே விக்கெட்டை பறி கொடுப்பதும் அணிக்கு பின்ன டைவை சேர்க்கிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் இதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

புனே அணி கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வி கண்டது. முன்னாள் கேப்டனான தோனி கடும் நெருக்கடியில் உள்ளார். இதுவரை அவர் 4 ஆட்டங்களிலும் சேர்த்து 33 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் அவர் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இம்ரன் தகிரின் பந்து வீச்சு பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமையக்கூடும்.

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 8

ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x