Published : 06 Apr 2017 10:06 AM
Last Updated : 06 Apr 2017 10:06 AM

வெற்றியுடன் தொடங்குவாரா ஸ்டீவ் ஸ்மித்

மும்பை இந்தியன்ஸ்: 2013, 2015-ல் சாம்பியன், 2016-ல் 5-வது இடம்

அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், அம்பாட்டி ராயுடு, சிம்மன்ஸ், குல்வத் ஹெஜ்ரோலியா, கரண் சர்மா, சவுரப் திவாரி, அசெலா குணரத்னே, மிட்செல் ஜான்சன், ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லீனஹன், ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாடு, வினய் குமார், கெய்ரோன் பொலார்டு, கிருனல் பாண்டியா, டிம் சவுத்தி, மலிங்கா, ஜகதீஷா சுஜித், நித்திஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஜித்தேஷ் சர்மா, தீபக் பூனியா.

பலம்:

சமபலம் பொருந்தியதாக அணி காணப்படுகிறது. 20 வீரர்களை இந்த சீசனில் தக்க வைத்துக் கொண்டது. 2013-ல் சாம்பியன் பட்டம் வென்ற போது அணியில் முக்கிய பங்கு வகித்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஜான்சன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். மேலும் அதிரடி வீரரான சவுரப் திவாரியும் 4 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி எப்போதுமே வலுவான பேட்டிங் வரிசையை கொண்டது. ரோஹித் சர்மா, சிம்மன்ஸ், பொலார்டு போன்ற வலுவான ஹிட்டர்கள் மிரட்ட தயாராக உள்ளனர். இவர்களுடன் அம்பாட்டி ராயுடு, ஜாஸ்பட்லர் ஆகியோரும் அதிரடியாக விளை யாடும் திறன் கொண்டவர்கள். பந்து வீச்சில் யார்க்கர் மன்னன் களாக மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அனுபவ வீரர்களான ஜான்சன், ஹர்பஜன்சிங் சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

பலவீனம்:

தொடக்கத்தில் மந்த மாக செயல்படுவது. பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும் கடந்த சீசனில் தொடக்க ஓவர்களில் ரன் சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.

புனே சூப்பர் ஜெயன்ட்: 2016-ல் 7-வது இடம்

அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

பலம்:

கடந்த சீசனில் 14 ஆட்டத்தில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றதால் அணி நிர்வாகம் துணிச்சலான முடிவை எடுத்து தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது. பேட்டிங்கை வலுப்படுத்த ரூ.14.5 கோடிக்கு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை வளைத்து போட்டுள்ளது. தோனி முதன்முறையாக ஐபிஎல் தொடரில் சாதாரண வீரராக களமிறங்குவதால் அவரிடம் இருந்து அதிரடி பேட்டிங்கை எதிர்பார்க்கலாம். டுபிளெஸ்ஸிஸ், அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவராக உள்ளனர்.

பலவீனம்:

காயம் காரணமாக முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மற்றும் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் ஆகியோர் விலகி உள்ளனர். அஸ்வின் இடத்தை நிரப்ப சரியான நபரை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் களமிறங்கி உள்ளது. பர்வேஷ் ரசூல், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீது குறிவைக்கப்பட்டுள்ளது. மார்ஷூக்கு பதிலாக இம்ரன் தகிரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்றைய ஆட்டம்

புனே - மும்பை | இடம்: புனே | நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x