Published : 28 Oct 2015 03:20 PM
Last Updated : 28 Oct 2015 03:20 PM
ஐபிஎல் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜாக் காலிஸுக்கு உதவிபுரியும் வகையில், துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாக் காலீஸ் இது குறித்து கூறும்போது, “அணியின் உதவிப்பயிற்சியாளராக சைமன் கேட்டிச் நியமிக்கப்பட்டது அருமையான ஒரு முடிவாகும். அவருடன் நான் விளையாடியுள்ளேன், கிரிக்கெட் ஆட்டம் பற்றிய அவரது புரிதல் சிறப்பானது. 2016 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா வெல்வதற்கு இவரது பங்களிப்பு பெரிதும் உதவும்” என்றார்.
56 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய இவரை கிரெக் சாப்பல் அனாவசியமாக தொல்லை கொடுத்து விலகச் செய்தார். அப்போது அவர் ‘இந்திய வீரர்கள் சிலர் கிரெக் சாப்பல் பற்றி கூறியது உண்மைதான்’ என்று கூறியதும் குறிப்பிடத் தகுந்தது.
இவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் டி20 அணிக்கு விளையாடியவர். 2014-ம் ஆண்டு பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பிக்பாஷ் கோப்பையை வென்றதில் கேட்டிச்சின் பங்களிப்பு அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT