Published : 14 Oct 2014 11:30 am

Updated : 14 Oct 2014 11:30 am

 

Published : 14 Oct 2014 11:30 AM
Last Updated : 14 Oct 2014 11:30 AM

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவு: ஷாகித் அப்ரிடி பகிரங்கம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு குறைவு என்று அந்த அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி பகிரங்கமாக கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது. அந்த அணி வீரர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளதை அப்ரிடியின் பேச்சு வெளிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது: உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் எங்கள் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. பேட்ஸ்மேன்களால் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது சந்தேகம்தான். எங்கள் அணியின் பந்து வீச்சு மட்டும் சற்று ஆறுதலாக இருக்கிறது என்று அப்ரிடி கூறினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உலகக் கோப்பைபாகிஸ்தான் அணிஷாகித் அப்ரிடி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author