Published : 06 Jul 2016 09:26 AM
Last Updated : 06 Jul 2016 09:26 AM

18-வது சதம் விளாசிய கெய்ல்

கரீபியன் பிரீமியர் லீக் டி 20-ல் கிறிஸ் கெயில் சதம் அடித்தார். இது அவருடைய 18-வது டி20 சதமாகும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய டிரின்போகோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜமைக்கா அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

ஜமைக்கா அணியின் கேப்டனான கிறிஸ் கெயில் சதம் விளாசினார். 54 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருடைய 18-வது டி 20 சதமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x