Published : 06 Aug 2016 09:00 AM
Last Updated : 06 Aug 2016 09:00 AM

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்

ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி யில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டியோடோரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா இடம் பெற்றுள்ள பி பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜெண்டினா, கனடா ஆகிய அணிகளும் உள்ளன. லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதால் மற்ற அணிகளுக்கு அச்சமூட்டக்கூடிய அணியாக உருமாறியுள்ளது. இதனால் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறுவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது.

இந்திய அணிக்கு வலுசேர்ப்ப வராக கேப்டனும் கோல்கீப்பருமான ஜேஷ் உள்ளார். அணியின் நடுகள மும் பலமாகவே இருக்கிறது. தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவன மும், முதலிலேயே கோல் வாங்கு வதையும் தவிர்க்கும் பட்சத்தில் இந்திய அணியால் இம்முறை நிச்சயம் சாதிக்க முடியும்.

ஜெர்மனி, ஆலந்து போன்ற வலுவான அணிக்கு எதிரான ஆட்டங்களை இந்திய அணி டிரா செய்தால் காலிறுதியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை தவிர்க்கலாம்.

அனுபவ வீரரான சர்தார் சிங் நடுகளத்தில் மிரட்டக்கூடியவர். மன்பிரீத் சிங், துணை கேப்டன் எஸ்.வி.சுனில் ஆகியோர் கோல் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவர்களில் சிறந்தவர்கள். வி.பி ரகுநாத், ருபிந்தர் பால்சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். இவர்கள் ஒருங் கிணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுக்கும் பட்சத்தில் முதல் வெற்றியுடன் தொடரை தொடங்கலாம்.

அயர்லாந்து அணி முதன்முறை யாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் 3-வது இடம் பெற்றிருந்தது. மேலும் உலக ஹாக்கி லீக்கில் பாகிஸ்தான், மலேசியா அணிகளை வீழ்த்தியுள்ளது.

மகளிர் பிரிவில் 36 வருடங் களுக்கு பிறகு தற்போதுதான் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் காலடி எடுத்து வைக்கிறது. சுசீலா ஷானு தலைமையிலான இந்திய மகளிரணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஜப்பானை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x