Published : 14 Jun 2017 03:28 PM
Last Updated : 14 Jun 2017 03:28 PM

மொகமது ஆமீர் காயம்: டாஸ் வென்று பாக். முதலில் பீல்டிங் தேர்வு

கார்டிப் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக இந்த முக்கியப் போட்டியில் ஆட முடியாமல் போயுள்ளது. இவருக்குப் பதிலாக இன்னொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரும்மான் ரயீஸ் கான் என்பவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி வருமாறு: ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷீத், லியாம் பிளங்கெட், மார்க் உட், ஜேக் பால்.

பாகிஸ்தான் அணி: அசார் அலி, ஃபகார் ஜமான், பாபர் ஆஸம், மொகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், சர்பராஸ் அகமது, இமாத் வாசிம், ரும்மான் ரயீஸ் கான், ஷதாப் கான், ஹசன் அலி, ஜுனைத் கான்.

இங்கிலாந்து அணி பேர்ஸ்டோ, ஹேல்ஸுடன் தொடக்கம் கண்டு, விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x