Published : 28 Jun 2019 06:33 PM
Last Updated : 28 Jun 2019 06:33 PM

நான் அவுட் இல்லை : ட்விட்டரில் புகைப்படத்துடன்  ரோஹித் சர்மா வெளியீடு

நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டரில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட் செய்த போது ஒரு அபாரமான புல் ஷாட் சிக்ஸ் மற்றும் ஒரு கட் ஷாட் பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு கேட்ச் ஆனதாக 3வது நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டார்.

 

இது தொடர்பாக ரோஹித் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில் பேட்டுக்கும் கால்காப்புக்கும் உள்ள இடைவெளியில் பந்து கால்காப்பில் பட்டுச் சென்றதை உறுதி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு தன் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

 

அதாவது கிமார் ரோச்சின் இன்ஸ்விங்கர் ரோஹித் சர்மாவின் வலது கால் காப்பில்தான் பட்டது அப்போது மட்டைக்கும் பந்துக்கும் இடையே போதிய இடைவெளி இருந்தது என்பதை உறுதி செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தன் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார்.

 

6வது ஓவரின் கடைசி பந்து ஒன்றை ரோச் இன்ஸ்விங்கராக வீச இதனை சற்றும் எதிர்பார்க்காத ரோஹித் சர்மா பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து சென்றது, களநடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் மே.இ.தீவுகள் 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்ய ஒரு ஆங்கிளில் பந்து மட்டையின் உள் விளிம்பு கால்காப்பு இரண்டிலும் பட்டது போல் தெரிய இன்னொரு ஆங்கிளில் படாமல் சென்றதாகத் தெரிந்தது.

 

கிரிக்கெட்டின் அடிப்படை நடைமுறை சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்குச் செல்ல வேண்டும் என்பது அங்கு கடைபிடிக்கப் படாமல் அவுட் கொடுக்கப்பட்டது, இதனால் ரோஹித் சர்மா கடும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்து வெளியேறினார்.

 

ஹாட் ஸ்பாட் டி.ஆர்.எஸ்-ல்  இல்லாததால் ஸ்னிக்கோ மீட்டர் வைத்துதான் நடுவர் தீர்ப்பை வழங்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அவுட்டினால் ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை என்பது வேறு விஷயம், ஆனாலும் ரோஹித் சர்மாவுக்கு அதிருப்தியை வெளியிட உரிமை உள்ளது என்பதே ரசிகர்களின் பார்வையாக உள்ளது.

‘பிக் பாஸ்’ புகழ் என்பது வெறும் மாயை மட்டும்தானா?

‘பிக் பாஸ்’ புகழ் என்பது வெறும் மாயை மட்டும்தானா? 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x