Published : 09 Sep 2018 01:00 PM
Last Updated : 09 Sep 2018 01:00 PM

வரலாறு படைத்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா: செரீனா வில்லியம்சை வீழ்த்தி யு.எஸ். ஓபன் சாம்பியன்

 

டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீராங்கனையானார் நவோமி ஒசாகா. யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சை 6-2, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி வரலாறு படைத்தார் நவோமி ஒசாகா.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் செட்டில் ஆக்ரோஷமாகத் தொடங்கினார் நவோமி ஒசாகா. 6 முறை யு.எஸ். ஓபன் பட்டம் என்ற செரீனா வில்லியம்ஸ் சர்வை இருமுறை உடைத்து வெற்றியை தன் வசமாக்கினார்.

மிகவும் சுறுசுறுப்பாக களத்தில் எங்கும் நகரக்கூடியவர் நவோமி ஒசாகா, மேலும் பேஸ்லைனில் நின்று கொண்டு அசுர ஷாட்களை அடித்ததில் செரீனா நிலைகுலைந்தார்.

2வது செட்டில் சர்ச்சை.. செரீனா காட்டுக் கத்தல்:

செரீனாவின் பயிற்சியாளர் ஸ்டேடியத்திலிருந்து செரீனாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார், இது விதிமீறல் ஆகும். இதனையடுத்து விதியை மீறியதாக செரீனா மீது புகார் பதிவானது. இதனையடுத்து ஆத்திரமடைந்த செரீனா நடுவரை நோக்கிக் கடுமையாகச் சத்தம் போட்டு தன் டென்னிஸ் மட்டைய ஓங்கி தரையில் அடித்தார். இது மேலும் விதிமீறலானது. இதற்கு ஒசாகாவுக்கு ஒரு கூடுதல் புள்ளி அளிக்கப்பட்டது.

 

அப்போது நடுவரிடம், “நான் ஒன்றும் பொய் கூறி ஜெயிப்பவள் அல்ல, இதற்குப் பதில் நான் தோற்பேன்” என்று நடுவரிடம் கத்தினார். தொடர்ந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்ய கேம் பெனால்டி கொடுக்கப்பட்டது, அழுகையை அடக்கிக் கொண்ட செரீனா சர்வை ஒருவாறாக தன் வசம் காப்பாற்ற முடிந்தது.

பெனால்டி கொடுக்கப்பட்டதால் இரண்டாவது செட்டில் ஒசாகாவுக்கு பெரிய சாதகம் ஏற்பட்டது. இதனையடுத்து 6-4 என்று 2வது செட்டைக் கைப்பற்றி யு.எஸ்.ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று, கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் ஆன முதல் ஜப்பானிய வீராங்கனையானார் நவோமி ஒசாகா.

24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்யும் செரீனாவின் கனவு அவரது நடத்தையாலே தகர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x