Published : 22 Sep 2018 09:58 AM
Last Updated : 22 Sep 2018 09:58 AM

விஜய் ஹசாரே டிராபி; தமிழக அணி அபார வெற்றி: ஜெகதீசன் 133 ரன்கள் விளாசல்

விஜய் ஹசாரே டிராபியில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வி கண்டிருந்த நிலையில் நேற்று 2-வது ஆட்டத் தில் சர்வீசஸ் அணியை எதிர் கொண்டது. சென்னையில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரரான என்.ஜெக தீசன் 130 பந்துகளில், 17 பவுண்டரி களுடன் 133 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான அபி நவ் முகுந்த் 89 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 69 ரன் கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 30.4 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்து மிரளச் செய்தது. கேப்டன் விஜய் சங்கர் 5, அனிருத் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பாபா இந்திரஜித் 58 பந்து களில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரி களுடன் 76 ரன்களும், பாபா அப ராஜித் 3 ரன்களும் சேர்த்து ஆட்ட மிழக்காமல் இருந்தனர். சர்வீசஸ் அணி தரப்பில் வருண் சவுத்ரி 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 316 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சர்வீசஸ் அணி 46 ஓவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக வர்மா 60, ரஜத் பாலிவால் 52 ரன்கள் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5, பாபா அபராஜித் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x