Published : 12 Sep 2018 10:59 AM
Last Updated : 12 Sep 2018 10:59 AM

‘முதல் ஸ்கோரிங் ஷாட் சிக்ஸ், முதல் சதமும் சிக்ஸ்’- வளரும் அதிரடி வீரருக்கான முன்னாள் அதிரடி வீரரின் பாராட்டு

ஓவல் டெஸ்ட் போட்டியில் 117 பந்துகளில் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்த ரிஷப் பந்த் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அன்று கில்கிறிஸ்ட் கூறும்போது, ரிஷப் பந்த்திற்கு வாய்ப்பு கொடுங்கள், அவரிடம் திறமை உள்ளது, பொறுமை காட்டுங்கள் என்றார்.

இந்நிலையில் ரிஷப் பந்த் 29 பந்துகளில் டக் அவுட் ஆன பிறகே டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை விரைவில் கற்றுக் கொண்டு நேற்று அற்புதமான அதிரடி சதத்தை அடித்தார்.

தன் டெஸ்ட் வாழ்வின் முதல் ஸ்கோரிங் ஷாட்டை சிக்ஸ் மூலம் தொடங்கினார் ரிஷப் பந்த்,  அடில் ரஷீத் பந்தில் அன்று சிக்ஸ் அடித்து டெஸ்ட்டில் தன் ரன் எண்ணிக்கையைத் தொடங்கினார்.

நேற்று தன் முதல் சதத்திற்கு அடித்த ஷாட்டும் மிகப்பெரிய சிக்ஸ். ரஷீத்தை தூக்கி லெக் திசையில் ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடித்து சதம் கண்டார்.

இது குறித்து சேவாக் தன் ட்விட்டரில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் எண்ணிக்கையைத் தொடங்கியதும் சிக்ஸில், முதல் சதம் எடுத்ததும் சிக்ஸரில், மிகவும் பிரமாதமான ஒரு இளம் வீரர் ரிஷப் பந்த். கே.எல்.ராகுலிடமிருந்தும் ஒரு பிரமாத இன்னிங்ஸ். கடினமான பயணத்தில் பளிச்சிடும் விளக்கு” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “4-1 வெற்றிக்கு வாழ்த்துக்கள் இங்கிலாந்து, இந்தியா ஆங்காங்கே சிறப்பாகப் பளிச்சிட்டது. சீராக ஆடவில்லை. பந்த், ராகுல் கடைசி நாளில் ஆடிய ஆட்டம் மனதுக்கு இதமாக இருந்தது. கோலி, பவுலர்களும் சீராக விளையாடினர். வெளிநாடுகளில் வெற்றி பெற இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கும் முதல ரன் ஷாட் சிக்ஸ் மற்றும் முதல் சத ஷாட் சிக்ஸுக்காக ரிஷப் பந்த்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x