Published : 05 Mar 2018 04:52 PM
Last Updated : 05 Mar 2018 04:52 PM

ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்: ஹாட்ரிக் குறித்து ரஜினி வசனத்தில் பதிலளித்த இம்ரான் தாஹீர்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து பதிவு ஒன்றையிட்டுருந்தது. அதற்கு அருணாச்சலம் படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பதிலாக அளித்துள்ளார் இம்ரான் தாஹிர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற சர்வதேச வீர்ர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான்நடத்தி வருகிறது.

மூன்றாவது சீசன் பிஎஸ்எல் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கராச்சி, லாகூர், பெஷாவர், குவெட்டா, இஸ்லமபாத் முல்தான் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் முல்தான் சுல்தான் மற்றும் குவெட்ட கிளாடியேட்டர்ர்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் முல்தான் சுல்தான் அணியின் இம்ரான் தஹிர் ஹாட்ரிக் எடுத்தார்.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தாஹிர் விளையாடுகிறார்) தனது ட்விட்டர் பக்கத்தில், ”அனைவரும்சேர்ந்து விசில் அடியுங்கள் நமது  ஹாட்ரிக் வீரருக்காக” என்று பதிவிட்டிருந்தனர்.

இதற்கு இம்ரான் தஹிர் , "மிக்க நன்றி... உங்க மொழியில சொல்ல வேண்டும் என்றால்,  ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்குறான். பொறுத்து கொள்ளுங்கள் நான் இன்னும் சென்னை மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x