Published : 21 Mar 2018 08:54 AM
Last Updated : 21 Mar 2018 08:54 AM

தகுதிச் சுற்றில் பாம்ப்ரி வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றில் ந்தியாவின் யுகி பாம்ப்ரி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான தகுதி சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அர்ஜென்டினாவின் ரென்ஸோ ஆலிவோவை 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் 133-ம் நிலை வீரரான சுவீடனின் எலியாஸ் எமரை சந்திக்கிறார் யுகி பாம்ப்ரி.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் தொடரில் யுகி பாம்ப்ரி, 12-ம் நிலை வீரரான பிரான்சின் லூகாஸ் பவுலியை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீரரான ராம் குமார் ராமநாதன் தகுதி சுற்றின் முதல் ஆட்டத்திலேயே 6-7(4), 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மைக்கேலிடம் தோல்வியடைந்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x