Published : 24 Mar 2018 07:53 PM
Last Updated : 24 Mar 2018 07:53 PM

சுத்தம் செய்யும் வேலையை உங்கள் நாட்டிலிருந்து தொடங்குங்கள் லீ மேன்: மார்க் பவுச்சர் கடும் சாடல்

ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்து தென் ஆப்பிரிக்க மைதானங்களில் ரசிகர்கள் செயல்படுகின்றனர், இது நல்லதல்ல, அவர்கள் வரம்பு மீறுகிறார்கள் என்றும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது என்றும் ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறியதற்கு தென்னாப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து மார்க் பவுச்சர் தன் ட்விட்டர் பதிவில், “மிகச்சரி டேரன். முழுதும் ஏற்கிறேன். முதலில் சுத்தம் செய்யும் பணியை உங்கள் நாட்டிலிருந்து தொடங்குங்கள். ஆஸ்திரேலியாவில் நான் கண்ட தனிநபர், நிறவெறி அவதூறுகள் முட்டாள் தனமானவை. நீங்கள் கண்ணாடி வீட்டில் வாழ்வதில்லை. ஏன் திடீரென இந்த ஆர்வக்கொந்தளிப்பு?” என்று சீறியுள்ளார்.

பவுச்சருக்கு ஆதரவாக ட்வீட் செய்த ஒரு நபர் “ஆஸ்திரேலிய மைதானங்களில் நிறவெறி வசையை நீங்கள் கேட்டதேயில்லையா? உங்கள் நாடுதான் இருப்பதிலேயே நிறவெறி பிடித்தது” என்று கூறியதற்கு பவுச்சர் பதிலளிக்கும் போது, “காதுகளைத் திறங்கள் டேரன், மகாயா நிடினியைக் கேளுங்கள் அவர் கூறுவார். நீங்கள் தூங்கும்போது தேவதைகள்தான்” என்று நக்கலடித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறும்போது, “நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான் டேரன். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியும் இப்படி புலம்பியதில்லை” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x