Published : 01 Mar 2018 08:31 AM
Last Updated : 01 Mar 2018 08:31 AM

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி வரும் ஜூலை மாதம் சென்னையில் நடைபெறுகிறது.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தனிபருக்கான சாம்பியன்ஷிப் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரையும், குழு போட்டிகள் ஜூலை 24 முதல் 29-ம் தேத வரையும் சென்னையில் நடைபெறும் என இந்திய ஸ்குவாஷ் அகாடமி தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா இந்தத் தொடரை நடத்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா நடத்தியிருந்தது. கடந்த முறை போலந்தில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா 6-வது இடத்தை பிடித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x