Published : 07 Mar 2018 05:27 PM
Last Updated : 07 Mar 2018 05:27 PM

நாங்கள் விளையாடும் காலம் வரை ஸ்லெட்ஜிங் செய்வோம்: வார்னருக்கு டிம் பெய்ன் வக்காலத்து

டர்பன் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னருக்கும் குவிண்டன் டி காக்கிற்கும் இடையே நடந்த மோதலில் இருதரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில் குவிண்டன் டி காக் குடும்பம் பற்றி வார்னர் எதுவும் கூறவில்லை என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் வக்காலத்து வாங்கியுள்ளார்.

“இந்த ஒட்டுமொத்த தகராறில் எந்த தருணத்திலும் குவிண்டன் டி காக் குடும்பத்தை இழுக்கவில்லை. அந்தக் குற்றச்சாட்டு 100% தவறு. தெ.ஆ அணியின் மேலாளர் மொகமத் மொசாஜீ எப்படி அவர் உட்கார்ந்த இடத்திலிருந்து இதனைக் கூற முடியும் என்று தெரியவில்லை. நான் தான் இருவர் அருகிலும் இருந்தவன்.

டி காக் பேட் செய்யும் போது அவர் அங்கு நின்று ஆட முடியாதவண்ணம் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியது உண்மைதான், ஆனால் எல்லை மீறவில்லை. கிரிக்கெட் பற்றி பேசினோம், டி காக் உடற்தகுதி பற்றி ஓரிரு வார்த்தைகளைக் கூறினோம். களத்தில் நிற்பதை அவர்கள் கடினமாக உணர வேண்டும் என்பதற்காகச் செய்வதுதானே தவிர தனிப்பட்ட, அந்தரங்கத் தாக்குதல் எதுவும் இல்லை. இப்படி நாங்கள் விளையாடும் காலம் வரை செய்து கொண்டுதான் இருப்போம்.

படிக்கட்டில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அது பற்றி இப்போது அவர்கள் புகார் கூறுவது ஏமாற்றமளிக்கிறது.

குவிண்டன் டி காக், வார்னர் இடையே படிக்கட்டில் என்ன நடந்தது என்ன நடந்தது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் டி காக் கொதிப்படைந்திருந்தார், அவருக்கு அதற்கான நியாயங்கள் உள்ளன. வார்னர் மனைவி பற்றி டி காக் கூறியது என்னவென்பது எனக்கு மட்டும்தான் தெரியும்” இவ்வாறு கூறினார் டிம் பெய்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x