Published : 04 Jan 2019 12:42 PM
Last Updated : 04 Jan 2019 12:42 PM

சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள் அறிமுகம்

சென்னை ஸ்பார்டன்ஸ், அகமதாபாத் டிபண்டர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், யூ மும்பா வாலி, ஹைதராபாத் பிளாக்ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்ளும் புரோ வாலிபால் தொடர் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில்  நடைபெறுகிறது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக நட்சத்திர வீரராக கனடாவை சேர்ந்த ரூடி வெர்ஹாப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் இந்திய மற்றும் உள்ளூர் நட்சத்திரங்களான அகின் ஜாஸ், செல்டன் மோசஸ், பாக்கியராஜ், நவீன் ராஜா ஜேக்கப், விபின் ஜார்ஜ், பிறைசூடன், கே.ஜே.கபில்தேவ், ஹரிகரன், அஸ்வின், பிரபாகரன், ஷிகர், நரேஷ் ஆகியோரும் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அணியின் சின்னம், வீரர்கள் சீருடை, இணையத்தளம் http://www.provolleyball.in/Team/chennai-spartans) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் இந்திய வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் வாசுதேவன் சிவபிரகாசம், பொதுச் செயலாளர் ராமவதார் சிங், சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் உரிமையாளரான ராஜசேகரன் சிவபிரகாசம் மற்றும் ஹமினி ரெட்டி, உப்பிலியப்பன் கோபாலன், சம்பத் ரங்கநாதன், கிரண் குமார், நடேசன் சிவப்பிரகாசம், சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குமரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x