Last Updated : 19 Nov, 2018 02:35 PM

 

Published : 19 Nov 2018 02:35 PM
Last Updated : 19 Nov 2018 02:35 PM

உயரமான ஆஸி. பவுலர்கள், ‘அவ்வளவு உயரமில்லாத’ இந்திய பேட்ஸ்மென்கள்: ஆஸி. தொடர் சவால் பற்றி ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ‘அவ்வளவு உயரமில்லாத’ இந்திய பேட்ஸ்மென்களுக்குச் சவால் காத்திருக்கிறது, ஆனாலும் இம்முறை கதையை மாற்றி எழுதத் தயாராக இருக்கிறோம் என்று இந்திய குறைந்த ஓவர்கள் போட்டி அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 21-ம் தேதி பிரிஸ்பனில் டி20 போட்டியுடன் பெரிய ஆஸி. தொடர் தொடங்குகிறது.  வேகப்பிட்ச்களில் கடினமாக இருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

“இந்தியா எப்போதும் வேகமான பிட்ச்களான பெர்த், பிரிஸ்பன் ஆகியவற்றில் விளையாடியிருக்கிறது.  இந்த இரண்டு பிட்ச்களும் சவால்கள் நிரம்பியவை, ஆஸ்திரேலிய பவுலர்க்ள் மிக உயரமானவர்கள், இந்தப் பிட்ச்களை அவர்கள் நன்றாகப் பயன்படுத்துவார்கள்.

இந்திய பேட்ஸ்மென்கள் அவ்வளவு உயரமானவர்கள் அல்ல, எனவே எளிதல்ல, ஆனால் இம்முறை வீரர்கள் வரலாற்றை மாற்றி எழுதும் உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இங்கு வந்துள்ளனர்.

நம் பேட்ஸ்மென்களுக்கு சவால் காத்திருக்கிறது... ஆனால் இந்திய அணியில் வீரர்கள் பலர் ஏற்கெனவே இங்கு ஆடியவர்கள்தான், எனவே இங்குள்ள பிட்ச் உள்ளிட்ட சூழல்களை அறிந்தவர்களே. ஆனால் எந்த வடிவமாக இருந்தாலும் அவர்கள் பந்து வீச்சு நமக்கு சவால் அளிக்கும். இருப்பினும் தயாராகவே வந்துள்ளோம்.

இந்தியாவுக்கு வெளியே கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் ஓர் அணியாக ஆஸ்திரேலியாவில் நம் அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஒரு சிறப்பு உணர்வு இருப்பது உண்மையெ.

கடந்த முறை இங்கு டெஸ்ட் தொடரில் 2-ல் தோற்று ஒன்றில் ட்ரா செய்தோம்.  ஆனால் சில நெருக்கமான போட்டிகளை ஆடினோம்.  இம்முறையும் கடும் சவால்களை அளிப்போம்.  அணிக்குள் வெற்றி பெறுவதற்கான நல்லுணர்வு உள்ளது.  அனைத்துக் கணங்களையும் கைப்பற்றி வெற்றி பெறுவதுதான் லட்சியம்.

ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆடினால் ஒரு அணியாக நன்றாக உணர்வோம், அதன் பிறகு உலகக்கோப்பைக்க்கும் உத்வேகம் கிடைக்கும்.  ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வென்றால்தான் உலகக்கோப்பையில் தன்னம்பிக்கை ஏற்படும்.

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் அபாயகரமானதே, இதில் சந்தேகமேயில்லை. இங்கு ஆடும் போது ஓர் அணியாகத் திரண்டெழ வேண்டும்.

சில தனி வீரர்கள் ஆட்டத்திறனை அதிகரிப்பது மட்டுமல்ல, அணி ஒட்டுமொத்தமும் திரண்டு சவாலை எதிர்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் திரண்டு அணியாகச் செயல்படவேண்டும் என்றே விரும்புகிறோம்.

எங்களிடம் தரமான பவுலர்கள் உள்ளனர், குறிப்பாக ஸ்பின்னர்கள், தரமான ஸ்பின்னர்கள், தரமான பேட்டிங்குக்கு எதிராக... பார்ப்போம் எப்படி போகிறது என்று.

இம்முறை தனிச்சிறப்பான சில ஆட்டங்களினால் நம் அணியின் நிலையை மாற்ற விரும்புகிறோம். அது எளிதல்ல, ஆனால் எங்களிடம் தரமுள்ளது.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இங்கு நன்றாக ஆடியிருக்கிறேன், பிரிஸ்பன், பெர்த் ஆகிய இடங்களில் உண்மையான பவுன்ஸ் என் ஆட்டத்துக்கு தோதாக உள்ளது. ஏனெனில் உள்ளூரில் நான் சிமெண்ட் பிட்ச்களில் ஆடி பழக்கப்பட்டவன்.

குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் நன்றாக இங்கு ஆடியுள்ளேன் ,ஆனால் சிகப்புப் பந்த் கிரிக்கெட்டில்தான் சவால் உள்ளது. இப்போதைக்கு நான் இதைப்பற்றி யோசிக்கவிலை” இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x