Published : 18 Nov 2018 09:03 AM
Last Updated : 18 Nov 2018 09:03 AM
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார்.
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வந் தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோர் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் மானவ் தக்காரும், ரஷ்யா வின் டெனிஸ் இவோனினும் மோதினர்.
இதில் மானவ் தக்காரை 11-5, 4-11, 9-11 என்ற புள்ளி கள் கணக்கில் டெனிஸ் வெற்றி கண்டார். அரை இறுதியில் தோல்வி கண்டதையடுத்து மானவ் தக்காருக்கு வெண்கலம் கிடைத்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாயும், ரஷ்யாவின் அலெக்ஸி லிவென்ட்ஸோவும் மோதினர். இதில் ஹர்மீத் தேசாய் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT