Last Updated : 19 Oct, 2018 02:55 PM

 

Published : 19 Oct 2018 02:55 PM
Last Updated : 19 Oct 2018 02:55 PM

என் பையன்களின் கேலியிலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறேன்?: காமெடி ரன் அவுட் புகழ் அசார் அலியின் நிஜக் கவலை

அபுதாபியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அசார் அலி பவுண்டரி அடித்துவிட்டதாக நினைத்து ஆடுகளத்தில் நடுவில் பந்து சகவீரருடன் பேசியபோது ரன் அவுட் ஆகிய காமெடி குறித்து இன் தன் வாழ்நாள் இந்த ரன் அவுட் பற்றிய கேலிகளுடனேயே நகரும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

4-வது விக்கெட்டுக்கு அசார் அலி 64 ரன்களுடனும், அசாத் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது, ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் பந்துவீசினார். பீட்டர் சிடில் வீசிய பந்தை அசார் அலி சிலிப் திசையில் அடித்துவிட அது தேர்டு மேன்திசையில் பவுண்டரிக்கு நோக்கி வேகமாகச் சென்றது.இதைப் பார்த்த அசார் அலி பந்து பவுண்டரிக்கு செல்கிறது என நினைத்து ரன் எடுக்காமல் நிதானமாக நடந்து ஆடுகளத்தின் நடுப்பகுதிக்கு வந்தார்.

எதிர்தரப்பில் இருந்த ஆசாத்தும் வந்து இருவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், பவுண்டரியை நோக்கி வேகமாகச் சென்றபந்து பவுண்டரியை தொடாமல் நின்றுவிட்டது, இதைப்பார்த்த மிட்ஷெல் ஸ்டார்க் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் பைனேயிடம் வீசி எறிந்தார். அவர் பந்தைப் பிடித்து அசார் அலியை ரன் அவுட் செய்தார்.

ஆனால் அசார் அலிக்கோ ஏன் விக்கெட் கீப்பர் பைனே ரன்அவுட் செய்தார் என்று தெரியாமல் திருதிரு என விழித்துக்கொண்டிருந்தார். அதன்பின் நடுவர் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறியதும் தலையில் அடித்துக்கொண்டு அசார் அலி வெளியேறினார்.

இந்த ரன் அவுட் சமூகவலைத்தளங்களில் வைரலான கதை வேறு கதை. ஆசாஷ் ஷபீக்கும் இந்த காமெடிக்கு பொறுப்பு என்றாலும் அசார் அலி பொறுப்பை தான் ஏற்பதாகத் தெரிவித்தார்.

“இனி என்ன என் பையன்களுக்கு நான் எதைப்பற்றியும் உபதேசம் செய்ய முடியாது, அப்படிச் செய்தால் நீ ரன் அவுட் ஆகிவிட்டு பேசாதே என்று கேலி செய்யத்தான் போகிறார்கள்.

என் மீது கேள்விகள் எழும் என்பதை அறிகிறேன். அதுவும் வீட்டுக்கு போனால் என் 3 மகன்கள் நிச்சயம் நான் எது பேசினாலும் இந்த ரன் அவுட்டை வைத்து என்னை கேலி செய்வார்கள்.

அவர்கள் கேலியாகவே கேட்பார்கள். ஆண்டுக்கணக்கில் இதைப்பற்றித்தான் அவர்கள் பேசப்போகிறார்கள். நான் அவர்களுக்கு ஏதாவது கூறினால், அறிவுரை வழங்கினார். நீ ஒழுங்காக ஓடு என்று என்னைக் கேலி செய்வார்கள்.

பந்தைப் பார்க்காமல் இருந்தது என் தவறு, பந்து நின்று விட்டது, பவுண்டரி போகவில்லை என்பதை நான் எப்படி கவனிக்காமல் இருந்தேன்?

இதில் இன்னொன்று என்னவென்றால் பந்தை ஸ்டார்க் த்ரோ செய்த போது கூட அவர் பவுண்டரியிலிருந்து பந்தை எடுத்து த்ரோ செய்கிறார், ரன் அவுட்டுக்காக இல்லை என்றே நினைத்தேன். டிம் பெய்ன் பந்தை ஸ்டம்பில் அடிக்கும் போது கூட நான் இது என்ன வேடிக்கை என்றே நினைத்தேன். அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. இது என் தவறுதான்” என்றார் அசார் அலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x