Last Updated : 25 Oct, 2018 07:59 PM

 

Published : 25 Oct 2018 07:59 PM
Last Updated : 25 Oct 2018 07:59 PM

‘என்னை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை என்று கூட சொல்லவில்லை, எனக்கும் தெரியாது’: கேதார் ஜாதவ் வேதனை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மீதமுள்ள 3 போட்டிகளுக்கும் என்னை ஏன் தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என எனக்குத் தெரியவில்லை, அது குறித்து எனக்குச் சொல்லவும் இல்லை என்று ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் வேதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டியின் போது காயம் காரணமாக கேதார் ஜாதவ் விலகினார். அதன்பின் அவர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரா டெஸ்ட் போட்டித் தொடரில் வாய்ப்பு பெறவில்லை.

இந்நிலையில், உடல்நிலை குணமடைந்து தியோதர் டிராபி கோப்பையில் விளையாடிவரும் கேதார் ஜாதவ் ஒருநாள் தொடரில் இடம் பெறுவேன் என எதிர்பார்த்த நிலையில் அவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. மேலும், சமீப காலமாக வீரர்களுக்கும், தேர்வாளர்களுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற காரணம் குறித்துக்கூட விளக்கம் அளிப்பதில்லை என்று வீரர்கள் தரப்பில் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

சமீபத்தில் தோனி விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவார் என்று தோனியைக் கேட்காமலேயே தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துவிட்டார். ஆனால்,தோனியிடம் கேட்டபோது அப்படி திட்டம் ஏதும் இல்லை, ஜார்கண்ட் அணி நல்ல ஃபார்மில் இருக்கும்போது அதைச் சிதைக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டார். இதனால், வீரர்களுக்கும், தேர்வுக்குழுவுக்கும் இடையே தகவல் தொடர்பு மோசமடைந்துள்ளது.

அதன் நீட்சியாகவே, கேதார் ஜாதவை அணியில் தேர்வு செய்யாதது குறித்து தேர்வுக்குழுவினர் இன்னும் அவருக்குத் தெரிவிக்கவில்லை.

இது குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் கூறியதாவது:

எனக்கு ஏற்பட்டிருந்த காயம் குணமடைந்து தியோதர் டிராபி போட்டித் தொடரில் விளையாடி வருகிறேன். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலிரு போட்டிகளில் நான் இடம் பெறவில்லை, கடைசி 3 போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனநினைத்தேன். ஆனால், ஏன் என்னைத் தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை.

இப்போது நான் அணியிலும் இல்லாத காரணத்தால், நான் ரஞ்சிக் கோப்பையில்தான் விளையாட வேண்டும். நான் காயத்தில் இருந்து மீண்டு அனைத்து உடற்தகுதிகளிலும் தேறிவிட்டேன். நல்ல ஃபார்மில் இருக்கும் போது காயம் அடைந்தால் அது நம்மைக் கடுமையாக பாதிக்கும். அடுத்த வாய்ப்பு கிடைப்பதும் கடினமாக இருக்கும். மீண்டும் அணிக்குள் வருவதற்குள் ஏராளமான போட்டிகளை நாம் இழந்திருக்கக் கூடும். ஆனால் வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு செல்லவேண்டும்.

நாம் விளையாடும் போது எச்சரிக்கையுடன் , உடலில் காயம் படாமல் எப்படி விளையாட முடியும். நான் அனைத்து உடற்தகுதி சோதனையிலும் நான் தேறாவிட்டால், என்னைத் தேசிய கிரிக்கெட் அகாடெமி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டார்கள். ஒருவேளை என்னை அனுமதித்தால் கூட நான் களத்தில் சிக்கிக்கொள்வேன்.

உடற்தகுதி நிபுனர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது, அவர்களிடம் நேர்மையாக நடந்த கொள்ள வேண்டும். அவ்வாறு மறைத்தால், நிச்சயம் நாம் சிக்கிக்கொள்வோம்

இவ்வாறு கேதார் ஜாதவ் தெரிவித்தார்.

 

 

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்புக்காக வெயிட்டிங்: ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x