Published : 31 Jul 2018 09:29 AM
Last Updated : 31 Jul 2018 09:29 AM

விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர்

ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார்.

இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். முன்னதாக லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் நெய்மர் பலமுறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் டுவிட்டரில் வீடியோக்களை பதிவிட்டனர்.

இந்நிலையில் முதன்முறையாக தன் மீது கூறப்படும் விமர்சனங்களை நெய்மர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ஸ்பான்சர் விளம்பரம் மூலம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நேற்றுமுன்தினம் பிரேசில் நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதில் நெய்மர் கூறியிருப்பதாவது:

நான் மிகைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக நீங்கள் நினைக்கலாம். சில நேரங்களில் மிகைப்படுத்தும் செயலை நான் செய்திருக்கிறேன். ஆனால் களத்தில் நான் பாதிக்கப்படுவது உண்மை.

ரஷ்யாவில் நாங்கள் தோற்று வெளியேறியபோது நான் யாருக்கும் பேட்டி தரவில்லை. ஏனென்றால் நான் வெற்றிச் செய்திகளை மட்டுமே விரும்புபவன். உங் களை ஏமாற்றுவதற்கு நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் இதற்குப் பொருள். நான் மரியாதை கெட்டவனாக தோற்றமளிப்பதற்குக் காரணம், நான் விளையாட்டுப் பிள்ளை என்பதல்ல. மற்றவர்களை வெறுப்படையச் செய்வதற்கு நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

எனது கால்பந்து பாணி ஒரு சிறுவனை போன்றது. சில நேரங்களில் இது உலகை வசீகரிக்கும். சில நேரங் களில் அது உலகை எரிச்சல் அடைய வைக்கும். எனக் குள் இருக்கும் சிறுவனை காப்பாற்றுவதற்காக போராடு கிறேன். ஆனால் களத்தில் இல்லை. அளவுக்கு அதிக மாக களத்தில் நான் விழுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில் நான் விழவில்லை. அறுவை சிகிச்சை செய்த கணுக்காலில் எந்த ஒரு நடவடிக்கையும் மேலும் காயப்படுத்தவே செய்யும்.

உங்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். கண்ணாடியில் என்னை நான் பார்த்துக்கொள்ளவும் நீண்ட நேரம் எடுத் துக் கொண்டேன். தற்போது புதிய மனிதாக என்னை பார்க்கிறேன். நான் விழுந்தவன்தான், ஆனால் யார் விழுகிறார்களோ, அவர்களால்தான் எழ முடியும். நீங்கள் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அவற்றை எறியுங்கள். அது நான் நிலைப்பெற்றுக்கொள்ள உத வும். நான் நிலைபெறும்போது பிரேசிலும் என்னுடன் துணை நிற்கும்.

இவ்வாறு நெய்மர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x