Published : 24 Jul 2018 03:36 PM
Last Updated : 24 Jul 2018 03:36 PM

152 ஆண்டுகளில் முதல் முறை: 18 ரன்களில் ‘ஆல்அவுட்’; 12 நிமிடங்களில் ‘சேஸிங்’: இங்கிலாந்து கவுண்டியில் சுவாரஸ்யம்

 

இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. 18 ரன்களை 12 நிமிடங்களில் எதிரணி சேஸிங் செய்ய ஆட்டம் ஒரு மணிநேரத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இங்கிலாந்து கவுண்டி அணி வரலாற்றில் குறைவாக எடுக்கப்பட்ட ஸ்கோர் இதுவாகும், குறைவான நேரத்தில் சேஸிங் செய்யப்பட்டதும் இதுவாகும்.

இங்கிலாந்தின் கென்ட் மாநிலத்தில் ஷெப்பார்ட் நீம் கென் கிரிக்கெட் கிளப் சார்பில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெக்கன்ஹாம் சிசி அணிக்கும், பெக்ஸ்லே சிசி அணிக்கும் இடையே நேற்று போட்டி நடந்தது.

இதில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த பெகென்ஹாம் சிசி அணி 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணியில் 11 பேட்ஸ்மேன்களில் 5 பேர் டக்அவுட், மற்றவர்களில் அலெக்சாண்டர் சென்(4), வில்லியம்(4), லெனாக்ஸ்(4), மால்கம்(1), ஆசாத் அலி(1), நதிர்(1) என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

5 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த பெகென்ஹம்ஸ் அணி அடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் சீட்டுக்கட்டு சரியவிட்டதுபோல் மளமளவென இழந்தது முதல் 4 விக்கெட்டுகளை வெறும் 9 ரன்களுக்கும், 12 ரன்களுக்குள் அடுத்த 2 விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 3 விக்கெட்டுகள் 15, 17 மற்றும் 18 ரன்களில் பறிபோனது.

இதைத் தொடர்ந்நு 19 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெக்ஸ்லே அணியின் கிறிஸ்டோபர்(4), எய்டன் கிக்ஸ்(12) ரன்கள் சேர்த்து 3.3 ஓவர்களில் 12 நிமிடங்களில் சேஸிங்செய்தனர்.

ஜேஸன் பென் தான் வீசிய 5.2 ஓவர்களில் 3 மெய்டன் உள்ளிட்ட 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், காலம் மெக்லாட் தான் வீசிய 6 ஓவர்களில் 2 மெய்டன் உள்பட 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதில் பெகன்ஹம் அணி பந்துவீசும் போது 6 உதிரிகள் ரன்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x