Published : 04 Jun 2018 06:33 AM
Last Updated : 04 Jun 2018 06:33 AM

ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி நேற்று நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் ஆஸ்திரியாவுடன் மோதியது. 8 மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்ட ஜெர்மனி அணியின் நட்சத்திர கோல் கீப்பரான மனுவெல் நெவர் களமிறங்கியதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 11-வது நிமிடத்தில் ஜோர்கே ஸைபென்ஹான்டில் உதவியுடன் ஓஸில் கோல் அடிக்க முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் தனது அணி கோல் வாங்குவதில் இருந்து பாதுகாக்க மனுவெல் நெவர் தவறினார். 53-வது நிமிடத்தில் ஹின்டெரெகெரும், 69-வது நிமிடத்தில் ஸ்கோபும் கோல் அடிக்க ஆஸ்திரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தியது. ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் இந்த தோல்வியானது ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோவுக்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x