Published : 13 Jun 2018 09:53 AM
Last Updated : 13 Jun 2018 09:53 AM

டிவியில் போட்டியை பார்க்க லட்சக்கணக்கில் கட்டணம்

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு எகிப்து அணி 28 வருடங்களுக்குப் பிறகு தற்போது தகுதி பெற்றுள்ளது. 32 அணிகள் கலந்து கொள்ளும் உலகக் கோப்பை திருவிழா நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில் தங்களது நாட்டில் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதற்கான உரிமையை தேசிய ஊடக ஆணையத்துக்கு வழங்க ஃபிபா நடவடிக்கை எடுக்க வேண்டும் என எகிப்து தொலை தொடர்பு ஆணையம் ஃபிபாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

எகிப்தில் கால்பந்து தொடரை ஒளிபரப்பும் உரிமையை கத்தாரை அடிப்படையாக கொண்டு இயங்கும் பிஇன் என்ற தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி போட்டியை டி.வியில் பார்ப்பதற்கான டீகோடரை வாங்க சந்தாதாரர்கள் சுமார் ரூ.1,47,272 செலுத்த வேண்டும். மேலும் கட்டணமாக ரூ.1,80,702 தொகையையும் செலுத்த வேண்டும். 97 மில்லியன் மக்கள் தொகை கொண்ட எகிப்து நாட்டில் சராசரியாக ஒரு நபரின் வருமானம் ரூ.15,828 ஆக உள்ளது.

இதனால் போட்டியை காண்பதற்கான கட்டணத்தை செலுத்துவது மக்களால் முடியாத காரியம் என எகிப்து தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x