Published : 21 May 2018 04:01 PM
Last Updated : 21 May 2018 04:01 PM

கொல்கத்தா வென்றிருக்கா விட்டால் எனக்கும் கூட ஓய்வுதான்: சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்

சுல்தான் ஆஃப் ஸ்விங் ஆகிவரும் சென்னை சூப்பர் கிங்சின் தீபக் சாஹர், ஒரு ஆல்ரவுண்டர் என்ற தனது திறமையையும் நேற்று அபாரமான பேட்டிங்கினால் கிங்ஸ் லெவனை வெளியேற்றிய போட்டியில் அடையாளப்படுத்தினார்.

இந்த அதிர்ச்சி மருத்துவத்தை தோனி இத்தகைய நெருக்கடிப் போட்டிகளுக்காக வைத்திருந்தார் போலும்.

நேற்று கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் வாட்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, அது பற்றி சாஹர் கூறும்போது கொல்கத்தா அணி வென்று 16 புள்ளிகளுடன் தகுதி பெற்றிருக்காவிட்டால் தனக்கும் கூட ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் என்றார்.

போட்டி முடிந்தவுடன் தீபக் சாஹர் கூறியது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். முதல் போட்டியிலிருந்தே இந்தப் பிட்சில் நான் பவுலிங் செய்ய விரும்பினேன்.

பந்துகள் கொஞ்சம் ஸ்விங் ஆகின. 160-க்குள் அவர்களை மட்டுப்படுத்தியதை முக்கியமாகக் கருதுகிறேன்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பு இந்த பேட்டிங் வாய்ப்புக் கிடைத்தது என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பிரகாசிப்பேன். பந்து வீச்சில் வேகத்துக்காக கடந்த 6 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன் ஆரம்பிக்கும் போது ஸ்விங் பவுலர்தான் இப்போது கொஞ்சம் வேகம் கூட்டியுள்ளேன்.

இந்த ப்ளே ஆப் வாய்ப்புக்காக 2 ஆண்டுகள் காத்திருந்தோம். நிச்சயம் சிறப்பாக ஆடுவோம் என்று கருதுகிறேன். வாட்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கொல்கத்தா வெற்றி பெற்றிருக்கா விட்டால் எனக்கும் கூட ஓய்வுதான் அளிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு கூறினார் தீபக் சாஹர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x