Published : 28 May 2018 08:25 PM
Last Updated : 28 May 2018 08:25 PM

2018 ஐபிஎல்: சுவாரஸ்ய விஷயங்களும், தெரியாத தகவல்களும்

 

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் அதிக சதம் அடித்தவர், அதிக அரை சதம் அடித்தவர், சிக்ஸர், பவுண்டரிஅதிகமாக அடித்த வீரர், விக்கெட்டுகள், மெய்டன் எடுத்த பந்துவீச்சாளர் ஆகியோரின் விவரங்கள் வந்துள்ளன.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 51 ஆட்டங்களைக் கொண்ட 11-வதுசீசன் ஐபிஎல் போட்டியில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்துள்ளனர்.

அவை குறித்த விவரம் வருமாறு.

அதிக ரன்: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 17 போட்டிகளில் பங்கேற்று 735 ரன்கள் சேர்த்ததே தனி ஒருவீரர் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும். இவர் ஆரஞ்சு தொப்பி வென்றார். 2-ம் இடத்தில் ரிஷாப் பந்த்(684 ரன்கள்), 3-ம் இடத்தில் லோகேஸ் ராகுல் (659 ரன்கள்) உள்ளனர்.

ஒரு ஓவரில் அதிக ரன்: டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 28 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். ஜோஸ் பட்லரும் 28 ரன்கள் சேர்த்துள்ளார்.

அதிக பவுண்டரி: டெல்லி அணி வீரர் ரிஷாப் பந்த் 68 பவுண்டரிகள் அடித்ததே அதிகபட்சமாகும். 2-வது இடத்தில் லோக்கேஸ் ராகுல் (66), வில்லியம்ஸன் (64) 3-ம் இடத்திலும் உள்ளனர்.

அதிக சிக்ஸர்: டெல்லி அணி வீரர் ரிஷாப் பந்த் 37 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாகும். 2-வது இடத்தில் வாட்ஸன் (35), 3-வது இடத்தில் அம்பதி ராயுடு (34) உள்ளார்.

அதிக அரைசதம்: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 8 அரை சதம் அடித்துள்ளார். 2-ம் இடத்தில் கே.எல் ராகுல் (6), டிவில்லியர்ஸ்(6) 3-ம் இடத்திலும் உள்ளனர்.

அதிக சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்ஸன் 2 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.

விரைவு அரைசதம்: கிங்ஸ் லெவன் வீரர் கே.எல்.ராகுல் டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாகும்.

விரைவு சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்ஸன் 51 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாகும்.

அதிகபட்ச ஸ்கோர்: டெல்லி வீரர் ரிஷாப் பந்த் 128 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

சிறந்த ஸ்டிரைக் ரேட்: ராஜஸ்தான் வீரர் கிருஷ்ணப்பா கவுதம் 196.37 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளதே சிறந்ததாகும்.

மிகப்பெரிய சிக்ஸ்: பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் 111 மீட்டர் உயரத்துக்கு அடித்த சிக்ஸரே உயரமான சிக்ஸராகும்.

பந்துவீச்சு

அதிக விக்கெட்: கிங்ஸ்லெவன் வீரர் ஆன்ட்ரூ டை 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாகும்.

அதிக மெய்டன்: சிஎஸ்கே வீரர் லுங்கி இங்கிடி 2 மெய்டன் ஓவர்கள் வீசியதே சிறப்பானதாகும்.

அதிக டாட் பால்: சன் ரைசர்ஸ் வீரர் ராஷித் கான் 17 போட்டிகளில் 68 ஓவர்கள் வீசி 167 டாட்பந்துகளை வீசியுள்ளதே சிறப்பானதாகும்.

சிறந்த எக்கானமி: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஈஷ் சோதி ஒரு ஓவருக்கு 5.86 ரன்கள் கொடுத்ததே சிறந்த பந்துவீச்சு, எக்கானமி ஆகும்.

அதிக வேகம்: ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர் ஜேப்ரா ஆர்சர் மணிக்கு 152 கி.மீ வேகத்தில் வீசியதே அதிவேக பந்துவீச்சாகும்.

மோசமான பந்துவீச்சு: சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பாசில் தம்பி ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் வீசி 70 ரன்கள் வாரிவழங்கியதே மோசமான பந்துவீச்சாகும். அடுத்த இடத்தில் உமேஷ் யாதவ் (59), ஷிவம் மவி (58) ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x