Published : 20 May 2018 08:58 AM
Last Updated : 20 May 2018 08:58 AM

‘பை-சைக்கிள் கிக்’ லியோனிடாஸ்

3

வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1938-ல் பிரான்ஸில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது முறை யாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பா கண்டத்துக்கு வழங்கியதால் கோபமடைந்த தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும், அர்ஜென்டினாவும் போட்டியை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக ஸ்பெயின் பங்கேற்கவில்லை.

ஆஸ்திரியா, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தபோதிலும், ஜெர்மனியுடன் இணைக்கப்பட்ட தைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகியது. ஆஸ்திரிய வீரர்கள் சிலர் ஜெர்மனிக்காக உலகக் கோப்பையில் விளையாடினர். ஆனால் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான மத்தியாஸ் சைன்டீலர் ஒன்றிணைந்த அணிக்காக விளை யாட மறுத்துவிட்டார். முந் தைய உலகக் கோப்பையைப் போன்றே இந்தப் போட்டியும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் ஹங்கேரி, ஸ்வீடன், பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஹங்கேரி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்தது.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது. இந்த ஆட்டத்தில் முன்னணி வீரரான லியோனிடாஸுக்கு பிரேசில் பயிற்சியாளர் ஓய்வு கொடுத்ததே அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றது. 1938 உல கக் கோப்பையில் பெரிதும் பேசப்பட்டவர் பிரேசில் வீரர் லியோனிடாஸ்தான். அந்த உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்த அவர், போலந்துக்கு எதிராக ஹாட்ரிக் கோலடிக்க பிரேசில் அணி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

பிரேசிலுக்காக 23 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தலைசிறந்த ஸ்டிரைக்கராக திகழ்ந்ததோடு, தனது பை-சைக்கிள் கிக்கால் உலக அளவில் பிரபலமடைந்தார். பிரேசில் நாட்டின் கருப்பு வைரம் என அழைக்கப்பட்ட லியோனிடாஸ் சர்வதேச போட்டியில் முதலில் அறிமுகமானது உருகுவே அணிக்காகதான். ஆனால் அடுத்த ஓரே ஆண்டில் பிரேசில் அணிக்கு தாவிய அவர், பிரேசில் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x