Published : 15 May 2018 07:36 AM
Last Updated : 15 May 2018 07:36 AM

வருகிறது புரோ வாலிபால் லீக்

கிரிக்கெட், ஹாக்கி, பாட்மிண் டன் விளையாட்டுகளில் நடத்தப்படுவதைப் போலவே புரோ வாலிபால் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்திய வாலிபால் சம்மேளனமும் (விஎப்ஐ) குருகிராமைச் சேர்ந்த பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனமும் இணைந்து செய்து வருகிறன்றன. இதன்படி புரோ வாலிபால் போட்டிக்காக 6 அணிகள் உருவாக்கப்படும். இதற்காக முதலில் 6 அணிகளைத் தேர்வு செய்ய ஏல முறை கொண்டு வரப்படுகிறது. மே 15-ம் தேதி இதற்கான விண்ணப்பங்கள் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் அலுவலககங்களில் (மும்பை, பெங்களூரு, குருகிராம்) கிடைக்கும். ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்து ஏல நடைமுறைகளில் பங்கேற்கலாம்.

ஏல விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதன் பின்னர் அணிகள் தேர்வு செய்யப்பட்டு ஜூலை 10-ம் தேதி அறிவிக்கப்படும். புரோ வாலிபால் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு நடத்தப்படும். நாட்டின் 2 முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.

இதற்காக வட இந்தியாவில் ஒரு நகரமும், தென்னிந்தியாவில் ஒரு நகரமும் தேர்வு செய்யப்படும். அணி வீரர்கள் அகில இந்திய வாலிபால் சங்க அணிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவர். வீரர்கள் தேர்வு ஏல முறைப்படி இருக்கும். மேலும் வெளிநாட்டிலிருந்து வாலிபால் வீரர்கள் அணிக்குத் தேர்வு செய்யப்படுவர் என்று புரோ வாலிபால் லீக் போட்டியின் தலைமைச் செயல் அதிகாரி ஜாய் பட்டாச்சார்யா தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x