Published : 12 Apr 2024 05:38 AM
Last Updated : 12 Apr 2024 05:38 AM

ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் | சிந்து, பிரனாய் தோல்வி

நிங்போ: சீனாவின் நிங்போ நகரில் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து,போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூவேயுடன் மோதினார். ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 18-21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சீன தைபேவின் லின் சுன்-யிடம் 18-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 43 நிமிடங்களில் முடிவடைந்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 17-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நமி மட்சுயாமா, சிஹாரு ஷிடா ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x