Published : 04 Apr 2024 07:50 AM
Last Updated : 04 Apr 2024 07:50 AM

நார்விச் சிட்டி அணியுடன் சென்னை அணி ஒப்பந்தம்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இடம் பெற்றுள்ள சென்னையின் எஃப்சி அணியானது இங்கிலாந்து கால்பந்து கிளப் ஆன நார்விச் சிட்டி எஃப்சி அணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நார்விச் சிட்டி எஃப்சியின் வணிக இயக்குநர் சாம் ஜெஃப்ரி, சென்னையின் எஃப்சி அணி துணைத் தலைவர் ஏகான்ஷ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி 3 ஆண்டு காலத்திற்கு இரு அணிகளும் பரஸ்பரம் கால்பந்து ஆட்டங்களின் தரத்தை உயர்த்துவதற்கு இணைந்து செயல்படும். நார்விச் சிட்டி எஃப்சி 1961-62 மற்றும் 1984-85-ம் ஆண்டு சீசனில் இருமுறை லீக் கோப்பையை வென்றுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் 1992-93 சீசனில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும் 2018-19 மற்றும் 2020-21 சீசன்களில் இஎஃப்எல் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றனர். அத்துடன் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சீசனில் அவர்கள் 6-வது இடத்தில் உள்ளனர்.

இதற்கிடையே ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி இன்று ஜாம்ஷெட்பூருடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x