Published : 01 Apr 2024 09:26 PM
Last Updated : 01 Apr 2024 09:26 PM

3 டக் அவுட், சொதப்பிய மும்பை வீரர்கள்: ராஜஸ்தானுக்கு 126 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

மும்பை: ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை சேர்த்துள்ளது. இதில் 3 வீரர்கள் ரன் எதுவும் சேர்க்காமல் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். ஆனால் சோகம் என்னவென்றால், டிரெண்ட் போல்ட் வீசிய 5-வது பந்தில் ரோஹித் டக்அவுட். அதுக்கு அடுத்த பந்தே நமன் திர் எல்பிடபள்யூ. ஆக 1 ஓவரில் 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது மோசமான தொடக்கத்தை கொடுத்தது மும்பை.

சோகத்திலிருந்து மீள்வதற்குள் 3வது ஓவரில் டெவால்ட்பிரவிஸ் டக்அவுட். ஆக 3 ஓவருக்கு 3 விக்கெட். ரன்கள் 16. அடுத்து 4வது ஓவரில் இஷான் கிஷன் 16 ரன்களுக்கு அவுட். ஆக 4வது ஓவரில் 4 விக்கெட். ஐபிஎல்லில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் ஒரு இன்னிங்சில் டக் அவுட் ஆனது இது ஆறாவது முறையாகும்.

ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தாலும், 10வது ஓவரில் 34 ரன்களில் ஹர்திக் விக்கெட். 10 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறிக்கொண்டிருந்தது மும்பை.

அடுத்து வந்த பியூஷ் சாவ்லா 3 ரன்களில் களத்திலிருந்து வெளியேறியதும் ரசிகர்கள் அப்செட். ஓரளவுக்கு விளையாடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த திலக் வர்மா 32 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை 102 ரன்களை சேர்த்திருந்தது.

அடுத்து ஜெரால்ட் கோட்ஸி 4 ரன்கள், டிம் டேவிட் 17 ரன்கள் என விக்கெட்டுகள் சரிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை 125 ரன்களைச் சேர்த்தது. பும்ரா 8 ரன்களுடனும், ஆகாஷ் மத்வால் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், , நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ்கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x