Published : 13 Mar 2024 07:11 AM
Last Updated : 13 Mar 2024 07:11 AM

இந்தியன் வெல்ஸ் மார்ஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் | ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மார்ஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 123-ம் நிலை இத்தாலியின் லூகா நார்டியுடன் மோதினார்.

இதில் லூகா நார்டி 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு தரவரிசையில் 100 இடங்களுக்குள் மேல் உள்ள வீரர் ஒருவர் மாஸ்டர்ஸ் அளவிலான டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரை தோற்கடிப்பது இதுவே முதன்முறையாகும்.

லூகா நார்டி இந்தத் தொடரில் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார். இதன் பின்னர் முன்னணி வீரர் கடைசி நேரத்தில் விலகியதால் ‘தோல்வி அதிர்ஷ்டசாலி’ என்ற வகையில் பிரதான சுற்றுக்குள் லூகா நார்டி நுழைந்திருந்தார். ஜோகோவிச், இத்தாலி வீரர்களுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்துள்ளார். இதில் 3 ஆட்டங்கள் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜன்னிக் ஷின்னரிடம் தோல்வி அடைந்ததாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x