Published : 13 Mar 2024 05:52 AM
Last Updated : 13 Mar 2024 05:52 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: சொத்து விவகாரங்கள், வழக்குகள் பேச, முத்து சேகரிக்க, மிருதங்கம் பயில, வங்கிக் கடன் பெற, செங்கல் சூளை பிரிக்க, நவகிரக சாந்தி செய்ய, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவரை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் நன்மை அளிக்கும்.

மேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் நடவடிக் கையை கவனிக்கவும். மனதில் குழப்பங்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் வராது என்றிருந்த கடனெல்லாம் தானாக வந்துசேரும்.

மிதுனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணம் சாதகமாகும். புதிய மனை, வீடு வாங்க திட்டமிடுவீர்.

கடகம்: முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர்.

கன்னி: அலுவலக வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வரக் கூடும். குடும்பத்தாரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். வாகனத்தில் நிதானமாக பயணம் செய்யுங்கள். பழைய வழக்குகள் சாதகமாகும்.

துலாம்: சுறுசுறுப்பாக செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: வெளியூர் பயணங்கள் மன நிம்மதி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு. வாகன பழுது நீங்கும். கலை பொருட்கள் சேரும்.

தனுசு: குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.

மீனம்: சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். கையில் பணம் புரளும். ஈகோ பிரச்சினை தீர்ந்து, தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். உடல்நலம் சீராகும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x