Published : 07 Feb 2024 08:51 AM
Last Updated : 07 Feb 2024 08:51 AM

ஐஎஸ்எல் கால்பந்து | பெங்களூரு அணியுடன் சென்னை இன்று மோதல்

பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 13 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது. சென்னை 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 9-வது இடம் வகிக்கிறது.

பெங்களூரு அணி கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கிலும் சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றன.

இந்த சீசனில் பெங்களூரு அணியுடன் 2-வது முறையாக மோதுகிறது சென்னை அணி. கடந்த டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. இதே போன்ற செயல்திறனை இன்றைய ஆட்டத்திலும் வெளிப்படுத்துவதில் சென்னையின் எப்சி அணி வீரர்கள் முனைப்பு காட்டக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x