Published : 07 Feb 2024 08:43 AM
Last Updated : 07 Feb 2024 08:43 AM

டிஎன்பிஎல் | 8-வது சீஸனுக்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 8-வது சீஸனுக்கான ஏலம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள கலைஞர் மு.கருணாநிதி அரங்கத்தில் இன்று (7-ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையான 70 லட்சத்திற்குள் 8 அணிகளும் குறைந்தபட்சம் 16 வீரர்களையும் அதிகபட்சமாக 20வீரர்களையும் தங்கள் அணியில் எடுத்துக் கொள்ளலாம் எனஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஏலத்திற்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐபிஎல் நட்சத்திரங்களான சாய் கிஷோர் மற்றும்சந்தீப் வாரியர் போன்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் திருச்சி கிராண்ட் சோழாஸ் என்ற புதிய பெயரில் புதுப்பொலிவுடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x