Published : 11 Jan 2024 07:22 AM
Last Updated : 11 Jan 2024 07:22 AM
சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடடில் வரும் ஜனவரி 19 முதல் 31-ம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், 6000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் குத்துச்சண்டை, பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், களரிபயட்டு ஆகிய விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளின் தேர்வு இன்று (11-ம் தேதி) காலை 7 மணி முதல் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் என தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. நீச்சல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கு பெறும் வீரர்கள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ் ஆகிவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT