Published : 15 Dec 2023 05:35 AM
Last Updated : 15 Dec 2023 05:35 AM

விஜய் ஹசாரே 2023 | அரை இறுதியில் தமிழ்நாடு தோல்வி

ராஜ்கோட்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஹரியாணாவிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழ்நாடு அணி.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹரியாணா 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹிமான்ஸு ரானா 118 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 116 ரன் விளாசினார்.

294 ரன்கள் இலக்குடன் பேட்செய்த தமிழ்நாடு அணி 47.1 ஓவரில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 31, நாராயண் ஜெகதீசன் 30, சாய் கிஷோர் 29, விஜய் சங்கர் 23 ரன்களில் நடையை கட்டினர். ஹரியாணா அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x